9 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகை

Added : செப் 02, 2021
Share
சென்னை:மத்திய தொகுப்பில் இருந்து, 8 லட்சம் கோவிஷீல்டு; 95 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன.தமிழகத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாம் அலை தொற்று பரவலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தபட்டு உள்ளன.இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து,

சென்னை:மத்திய தொகுப்பில் இருந்து, 8 லட்சம் கோவிஷீல்டு; 95 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன.

தமிழகத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூன்றாம் அலை தொற்று பரவலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தபட்டு உள்ளன.இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து, 8 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், விமானம் வாயிலாக சென்னை வந்தன.

அந்த தடுப்பூசிகள், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாநில மருந்து கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.அதேபோல, தெலுங்கானா மாநிலம் ஐதர பாதில் இருந்து 95 ஆயிரத்து 250 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், சாலை மார்க்கமாக மாநில மருந்து கிடங்குக்கு வந்தன. இந்த தடுப்பூசிகளை, மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X