அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அறிவுரை

Added : செப் 02, 2021
Share
Advertisement
''சட்டசபையில் எம்.எல்.ஏ.,க் கள்அனைவரும் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், சபாநாயகருக்கு முன்புள்ள பாதையை கடந்து, அமைச்சர் துரைமுருகன் இருக்கை அருகே சென்று அவரிடம் பேசினார். இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:சபை முன்னவர் அருகில் நிற்கும் உறுப்பினர்கவனத்திற்கு ஒன்றை கூறுகிறேன். சபை குறுக்கே

''சட்டசபையில் எம்.எல்.ஏ.,க் கள்அனைவரும் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், சபாநாயகருக்கு முன்புள்ள பாதையை கடந்து, அமைச்சர் துரைமுருகன் இருக்கை அருகே சென்று அவரிடம் பேசினார். இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

சபை முன்னவர் அருகில் நிற்கும் உறுப்பினர்கவனத்திற்கு ஒன்றை கூறுகிறேன். சபை குறுக்கே நடந்து வரக்கூடாது. இவ்வாறு வருவதை, சபை முன்னவர் துரைமுருகன் தான் கண்டித்தார். சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; எவ்வாறு எழுந்து செல்ல வேண்டும்; அமைச்சர்களை சந்திக்க எப்படி செல்ல வேண்டும் என, ஒன்றேகால் மணி நேரம் வகுப்பு எடுக்கப்பட்டது. அதை மனதில் வைத்து, அனைவரும் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X