தமிழ்நாடு

3 ஆண்டாக இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு! விவசாயிகள் தவிப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2016-- -17 ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் விடுபட்டவர்களுக்கு கடந்த 3 ஆண்டாக இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இம்மாவட்டத்தில் பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமிய தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர். இதில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 3 ஆண்டாக வழங்கப்படவில்லை. இதனால் பயிர் இழப்பீடு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2016-- -17 ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் விடுபட்டவர்களுக்கு கடந்த 3 ஆண்டாக இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.


இம்மாவட்டத்தில் பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமிய தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர். இதில் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 3 ஆண்டாக வழங்கப்படவில்லை. இதனால் பயிர் இழப்பீடு கைக்கு வராமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காப்பீடு குறித்த தகவல்கள் முழுமையாக வழங்காததால் அதன் விபரங்களை பெற்று இழப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கிவிட்டனர். ஆனால் கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்தற்கான ரசீதுடன் வந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் ரசீதுகளை தொலைத்த விவசாயிகள் இழப்பீடு தொகையை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது, 2017 ம் ஆண்டில் கம்ப்யூட்டரில் காப்பீடு பதிவு செய்யும் முறை இல்லை. இக்கணக்குகள் முற்றிலும் கூட்டுறவு சங்கத்தில் தான் இருக்கும். இது குறித்து கூட்டுறவு இணைபதிவாளரிடம் வலியுறுத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X