அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாசின்றி செயல்படுகிறார் மா.சு., பாராட்டிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,

Added : செப் 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
''மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை தான் சுகாதாரத் துறை. மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை அமைச்சர் மா.சு.,வை போல வேறு யாரும் செய்ய முடியாது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி பேசினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பிரதமர் பாராட்டு கொரோனா தொற்று காலத்தில் தடுப்பு பணிகள்
 மாசின்றி செயல்படுகிறார் மா.சு., பாராட்டிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,

''மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை தான் சுகாதாரத் துறை. மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை அமைச்சர் மா.சு.,வை போல வேறு யாரும் செய்ய முடியாது,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:

சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


பிரதமர் பாராட்டு

கொரோனா தொற்று காலத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஒருவரும் பசியின்றி இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசால், அரிசி மற்றும் பருப்பு வழங்கப் பட்டன. மற்றவர்களை சார்ந்து இருக்காமல், நாட்டிலேயே தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுதமிழக அரசின் கடமை.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 600 கிராம் எடை உடைய குறைமாத குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகும். மகப்பேறு உதவித்தொகை திட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் 70 சதவீத பிரசவங்கள் நடக்கின்றன.பிரதமரின் காப்பீடு திட்டத்தில் மக்களுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதை பிரதமர் பாராட்டியுள்ளார்.கொரோனா ஆரம்ப காலத்தில் அதன் சிகிச்சை முறை தெரியாமல் அனைவரும் திணறிய போது தமிழகத்தில் முதல் முறையாக, ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை செய்யப்பட்டது.


மகிழ்ச்சி

மாநில முதல்வர்கள், சுகாதாரத் துறையினருடன், பிரதமரும் அவ்வப்போது கலந்துரை யாடினார். தடுப்பு நடவடிக்கை, தனிமைப்படுத்துதல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மனதில் மாசு இல்லாமல் பணியாற்ற வேண்டிய துறை தான் சுகாதாரத் துறை. ஆகவே, மாசு இல்லாமல் செய்ய வேண்டிய சேவையை அமைச்சர் மா.சு.,வை போல வேறு யாரும் செய்ய முடியாது. சுகாதாரத் துறை மற்ற துறைகளை போல அல்ல. மருத்துவர் என்ற முறையில் இதை சொல்கிறேன். நாம் அனைவரும் பேதங்களை மறந்து மக்களின் நல்வாழ்விற்காக ஒன்றிணைந்து, ஒன்றிய அரசாக செயல்பட வேண்டும். அப்போது தான் நம் மாநில மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை கொடுக்க முடியும்.இவ்வாறு சரஸ்வதி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
06-செப்-202120:27:53 IST Report Abuse
spr இருவரையும் பாராட்டுவோம் தானே அனுபவித்த வேதனை தமிழகத்தில் வேறு யாருக்கும் வரக்கூடாதென்று மா.சுசெயல்படுகிறார். முன்பும் பெரும் புயல் காலத்தில் சென்னை மாநகர மேயராக அவர் சிறப்பாகவே பணியாற்றினார் காசு வாங்காமல் மனதில் மாசு இல்லாமல் நல்லது செய்யும் பொழுது மனம் திறந்து பாராட்டுவதும் தவறு செய்யும் பொழுது சுட்டிக் காட்டுவதும், பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்வதும் நல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சி செய்யும் செயல் இவர் தமிழக பாஜவுக்குத் தலைவர் ஆனால் நல்லதோ
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
04-செப்-202123:11:28 IST Report Abuse
N Annamalai நீங்களும் மனதில் மாசு இல்லாமல் பாராட்டுவது உங்கள் மனதின் "வெள்ளைதனய மலர் நீட்டம் போல் " உள்ளது .உங்களை தேர்ந்து எடுத்த மக்களும் பாராட்ட படவேண்டிய வர்கள் .தமிழக சட்ட மன்றம் சிறந்த உறுப்பினர்கள்தான் என்று உங்கள் சொல் காட்டுகிறது .
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-செப்-202120:52:13 IST Report Abuse
NicoleThomson நன்றாக செய்தால் பாராட்டுவது நல்ல நாகரிகம் , உபிக்கலா கத்துக்கோங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X