அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அ.தி.மு.க., வலியுறுத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சட்டசபையில், கடையநல்லுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ண முரளி பேசியதாவது: தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, ஒரு கல்லுாரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடையநல்லுாரில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ.,க்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயர்களை சூட்ட வேண்டும். இது, பாரபட்சம் இன்றி செயல்படும் அரசு

சட்டசபையில், கடையநல்லுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ண முரளி பேசியதாவது:

தி.மு.க., - எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, ஒரு கல்லுாரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடையநல்லுாரில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ.,க்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயர்களை சூட்ட வேண்டும். இது, பாரபட்சம் இன்றி செயல்படும் அரசு என்பதால் நானும் கேட்கிறேன்.

கடையநல்லுாரில், சித்த மருத்துவ பல்கலை அமைக்கப்படும் என, 2015ல் அறிவிப்பு வெளியிட பட்டது. அதற்கான பணிகள் நடந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பல்கலையை அமைத்து தர வேண்டும். தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தில் நிறைய கிராமங்கள் இணைக்கப்படாமல் உள்ளன. நகர்ப்புறங்களில், சில பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.எனவே, அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2,000 'மினி கிளீனிக்' திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக மேற்கொண்டு தகுந்த இடஒதுக்கீட்டை அந்தந்த பிரிவுகளுக்கு வழங்க வேண்டும். பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்த, அரசு உறுதுணையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X