அரசியல் செய்தி

தமிழ்நாடு

408 ஊராட்சிகள், 4 நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி: சுப்பிரமணியன்

Added : செப் 02, 2021
Share
Advertisement
''தமிழகத்தில், 408 ஊராட்சிகள் மற்றும் நான்கு நகராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. தற்போது விலை குறைத்து வாங்குவதால் 42.18 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அவரது பதிலுரை:ஆட்சி பொறுப்பேற்ற போது,

''தமிழகத்தில், 408 ஊராட்சிகள் மற்றும் நான்கு நகராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. தற்போது விலை குறைத்து வாங்குவதால் 42.18 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவரது பதிலுரை:ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா பாதிப்பு, 26 ஆயிரத்தில் இருந்து 36 ஆயிரமாக உயர்ந்தது. முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக, நோய் பாதிப்பு 1,500 என்ற நிலைக்கு வந்துள்ளது. தடுப்பூசி மட்டுமே இதற்கு தீர்வு. கடந்த ஆட்சியில் இந்தியாவில் அதிகமாக தடுப்பூசியை வீணடித்த மாநிலம் தமிழகம் என்ற நிலை இருந்தது. தற்போது அதிக தடுப்பூசி போடும் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது.

கொரோனா மூன்றாவதுஅலை வந்தால் தற்காப்பு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அதை ஏற்று கூடுதலாக 80 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளை கையிருப்பு வைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் 408 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொடைக்கானல், சிவகங்கை, ஊட்டி, பழநி என, நான்கு நகராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், 100 சதவீதம் கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஊட்டியில், 100 சதவீதம் பழங்குடியினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு சாப்பாடு, 550, 600 ரூபாய் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அது தரமானதாக இல்லை என்ற புகார் எழுந்தது.தற்போது மிகச் சிறந்த உணவகங்களில் பேசி, தரமான உணவு வழங்கப்படுகிறது. தினசரி 30 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. இதுவரை 36.90 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.கடந்த ஆட்சியில், மூன்றடுக்கு முக கவசம் தலா 9 ரூபாய், 80 காசுக்கு வாங்கப்பட்டது. தற்போது 85 காசு என்றும், அதிகபட்சமாக 1 ரூபாய் 15 காசுக்கும் வாங்கப்படுகிறது.

மூன்றரை மாதத்தில் 75 லட்சம் முக கவசங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக 6.48 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.அதேபோல, 'என் 95' முக கவசம் கடந்த ஆட்சியில் 14 ரூபாய் 40 காசுக்கு வாங்கப்பட்டது. தற்போது 6 ரூபாய் 95 காசுக்கு வாங்கப்படுகிறது. இதில் 2.32 கோடி ரூபாய் மிச்சம்.

பாதுகாப்பு உடைக்கு தலா 385 ரூபாய் செலவிடப்பட்டது. அதே உடை அதே நிறுவனத்திடம் 139 ரூபாய் 50 காசுக்கு வாங்கப்படுகிறது. இதனால் 33.36 கோடி ரூபாய் மிச்சம். இந்த மூன்றில் மட்டும் 42.18 கோடி ரூபாய், அரசு மிச்சப்படுத்தி உள்ளது. இந்த தொகை யாருக்கு சென்றதோ, நாம் அறியோம் பராபரமே. இதுபோல், நிறைய விஷயங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X