சீரமைக்கப்படாத கீழாய்குடி ரோடு; கிராம மக்கள் அவதி

Added : செப் 02, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி அருகே கீழாய்குடிக்கு செல்லும் ரோடு 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பரமக்குடி எல்லையும்,இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தின் எல்லை முடியும் ஊராட்சியாக கீழாய்குடி உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊருக்கு மெயின்

இளையான்குடி : இளையான்குடி அருகே கீழாய்குடிக்கு செல்லும் ரோடு 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பரமக்குடி எல்லையும்,இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தின் எல்லை முடியும் ஊராட்சியாக கீழாய்குடி உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊருக்கு மெயின் ரோட்டிலிருந்து செல்லும் 5 கி.மீ.,துாரமுள்ள ரோடு போடப்பட்டு 15 வருடத்திற்கும் மேலாகி உள்ள நிலையில் 10 வருடங்களாக ரோடு குண்டும், குழியுமாக இருப்பதினால் அவசர காலங்களிலும், கிராமத்தில் உள்ளவர்களுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனால் 108 ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர மறுப்பதினால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இந்த குண்டும், குழியுமான ரோட்டில் தினந்தோறும் சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் விழுந்து காயமுற்று வருகின்றனர். இது குறித்து பி.டி.ஓ.,க்களிடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X