சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் இரட்டைமடியில் மீன்பிடிப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த 3 விசைப்படகுகள், வலைகளை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர். பிற மீனவர்கள் படகுடன் தப்பி ஓடினர்.இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க மாநில அரசு தடை செய்தது. ஆனால் ராமேஸ்வரம் பகுதி விசை, நாட்டுப்படகு மீனவர்கள் தடை செய்த வலையில் மீன்பிடித்து வந்தனர். செப்.1ல் மண்டபத்தில் இருந்து 400

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த 3 விசைப்படகுகள், வலைகளை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர். பிற மீனவர்கள் படகுடன் தப்பி ஓடினர்.

இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க மாநில அரசு தடை செய்தது. ஆனால் ராமேஸ்வரம் பகுதி விசை, நாட்டுப்படகு மீனவர்கள் தடை செய்த வலையில் மீன்பிடித்து வந்தனர். செப்.1ல் மண்டபத்தில் இருந்து 400 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில், 100க்கு மேலான படகின் மீனவர்கள் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்தனர்.

மண்டபம் மீன்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி, மண்டபம் மரைன் போலீசாரின் ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலுக்கு ரோந்து சென்றனர்.அங்கு இரட்டைமடியில் மீன்பிடித்த முபாரக்,செய்யது ரில்வான், சிந்துஸ்ராணி ஆகியோரது 3 படகை மடக்கி பிடித்தனர். பிற படகின் மீனவர்கள் படகுடன் நாலாபுறமும் தப்பித்து ஓடி, தலைமறைவாகினர்.

பறிமுதல் செய்த படகில்இருந்த இரு இரட்டைமடிகள், 3 டன் பேசாளை, சூடை மீன்களை பறிமுதல் செய்து மண்டபம் கொண்டு வந்தனர். இப்படகிற்கு மீன்துறை துணை இயக்குநர் அலுவலகம் அபராதம் விதிக்கும் வரை மானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும், பறிமுதல் செய்த மீனை ஏலம் விடப்பட்டது என மீன்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X