அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சென்னை அருகே சித்த மருத்துவத்துக்கு தனி பல்கலை'

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை:''நாட்டிலேயே முதன் முறையாக, சித்த மருத்துவத்திற்கான தனி பல்கலை, சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் சுப்பிரமணியன், 110 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விபரம்: * முதல்வரால்
 'சென்னை அருகே சித்த மருத்துவத்துக்கு தனி பல்கலை'

சென்னை:''நாட்டிலேயே முதன் முறையாக, சித்த மருத்துவத்திற்கான தனி பல்கலை, சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர் சுப்பிரமணியன், 110 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றின் விபரம்: * முதல்வரால் துவங்கப்பட்டுள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டம், 258 கோடி ரூபாய் மதிப்பில் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்

* தமிழகத்திலேயே முதல் முறையாக 266 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் செயல்படும் செவிலியர் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்

* தொலை துார கிராமங்களுக்கு 389 புதிய நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள், 70 கோடி ரூபாயில் வழங்கப்படும்

* ஊரக பகுதிகளில் உள்ள 2,400 துணை சுகாதார நிலையங்கள், 35.5 கோடி ரூபாய் மதிப்பில் நல்வாழ்வு மையங்களாக மேம்படுத்தப் படும்

* 57 இடங்களில் உள்ள ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும்பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு, 25.8 கோடி ரூபாய் மதிப்பில் திரவ மருத்துவ ஆக்சிஜன் கலன்கள் அமைக்கப்படும்

* தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்துார் அரசு மருத்துவமனைகளில், 19.5 கோடி ரூபாய் மதிப்பில் 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கருவிகள் நிறுவப்படும். புதிதாக 188 'ஆம்புலன்ஸ்' வாகனங்கள், 69.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும்


2,400 செவிலியர் நியமனம்

*கிராமப்புற சுகாதார சேவைகளை மேம்படுத்த, 2,400 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவர்

* மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், முதியோர் மறதி நோய்க்கான தனி சிகிச்சை பிரிவுகள் துவக்கப்படும்

* கொரோனா தொற்றை கண்டறியும் 17 ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கருவிகள், தேவைப்படும் ஆய்வகங்களுக்கு 5.10 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்

* கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கடலுார் மாவட்டங்களுக்கு, நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் 1.50 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்

* சிறப்பு குழந்தைகளுக்கான உணர்திறன் சிகிச்சை பூங்கா, 2.24 கோடி ரூபாய் செலவில் 16 மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும்

* சென்னை உள்ளிட்ட 24 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய 'பேட்டரி' வாகனங்கள், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்

* அரியலுார், கள்ளக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட 12 அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கிகள் நிறுவப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நல்வாழ்வு மையங்களில், 1.19 கோடி ரூபாய் செலவில் கர்ப்பிணியருக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்படும்


சற்றே குறைப்போம்

* பொதுமக்களுக்கு, 'சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ், சர்க்கரை, எண்ணெய், உப்பு பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நடப்பாண்டில் 1,248 கோடி ரூபாய் செலவிடப்படும்

* குழந்தைகள், இணைய அடிமை நோய்க்கு ஆளாவதை தடுக்க, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், மனநல நிபுணர் குழுவால் சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படும்

* தற்போது கட்டப்பட்டு வரும் எட்டு புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு கூடுதலாக, 139 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்


நிறைவாழ்வு மையம்



* முதியோருக்கு காயகற்ப மருந்துகள், ஒற்றடம், நீராவி குளியல் போன்ற சிகிச்சைகள் வழங்க, 100 சுகாதார நிலையங்களில் சித்தர் நிறைவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்

* 120 சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருந்தகங்கள் 32 கோடி ரூபாய் செலவில் சுகாதார நல்வாழ்வு மையங்களாக தரம் உயர்த்தப்படும்

* 'டாம்கால்' நிறுவனம் உற்பத்தி செய்யும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விற்கப்படும்

* நாட்டிலேயே முதன் முறையாக, சித்த மருத்துவத்திற்கான தனி பல்கலை, சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X