சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் வாங்குவதற்கு பணம் கொடுக்காத முதியவர் கொலை; அண்ணன் மகன் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : டூவீலர் வாங்க பணம் கொடுக்காததால் சித்தப்பாவை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.உச்சிப்புளி அருகே உசிலங்காட்டு வலசையைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 60. ரயில் மோதியதில் வலது முழங்கை வரை இழந்ததால் திருமணம் செய்யவில்லை. தனியாக தங்கியுள்ளார்.மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்று கிடைக்கும் பணத்தை சகோதரர் மகன் தங்கச்சாமி வீட்டில் கொடுத்து வைத்து பின்

ராமநாதபுரம் : டூவீலர் வாங்க பணம் கொடுக்காததால் சித்தப்பாவை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

உச்சிப்புளி அருகே உசிலங்காட்டு வலசையைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 60. ரயில் மோதியதில் வலது முழங்கை வரை இழந்ததால் திருமணம் செய்யவில்லை. தனியாக தங்கியுள்ளார்.மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்று கிடைக்கும் பணத்தை சகோதரர் மகன் தங்கச்சாமி வீட்டில் கொடுத்து வைத்து பின் வாங்கிக்கொள்வார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிசையில் ராமகிருஷ்ணன் தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர். ராமகிருஷ்ணனின் மற்றொரு சகோதரர் கோவிந்தன்மகன் தங்கச்சாமி 40, அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர்.ராமகிருஷ்ணன் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ.17 ஆயிரத்தை தங்கச்சாமிக்கு டூவீலர் வாங்க கொடுப்பதாக கூறியிருந்தார். பணத்தை வாங்க ஆக.31 இரவு குடிசைக்கு சென்ற போது, இந்த நேரத்தில் தரமாட்டேன் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டையால் அடித்து ராமகிருஷ்ணனை கொலை செய்ததாக தங்கச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X