அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டணம் திரும்ப கிடைக்குமா?

Added : செப் 02, 2021
Share
Advertisement
காங்கிரஸ் - பிரின்ஸ்: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான பணம் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப கொடுக்க செய்ய வேண்டும்.கொரோனா பரிசோதனைக்கு 3,500 ரூபாய் பெற்றுள்ளனர்; அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை வசதி செய்ய வேண்டும்.'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில்,

காங்கிரஸ் - பிரின்ஸ்:

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான பணம் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப கொடுக்க செய்ய வேண்டும்.கொரோனா பரிசோதனைக்கு 3,500 ரூபாய் பெற்றுள்ளனர்; அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை வசதி செய்ய வேண்டும்.

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு 1 லட்சம் ரூபாய் போதாது. எவ்வளவு செலவாகிறதோ அதை வழங்க வேண்டும். இதய நோய் வந்தவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தால் ஒரு மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட ஊசி போட வேண்டும். அரசு மருத்துவமனையில் இந்த ஊசி இல்லை. உயிர் காக்கும் மருந்துகளை வாங்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், சி.டி., மற்றும் 'அல்ட்ரா ஸ்கேன்' போன்றவற்றுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்தவர்களை, ஊக்குவிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X