பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தை கண் போல் காக்கும் காப்பீடு..... 2020 ல் ரூ.850 கோடி வழங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கே.வெங்கடேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர், சிவகங்கை கூறியதாவது:மாவட்ட அளவில் பயிரிடும் பரப்பு எவ்வளவுமாவட்ட அளவில் 75,200 எக்டேரில் நெல், 4500 எக்டேரில் சிறுதானியம், 1800 எக்டேர் பயறு வகை, 4460எக்டேர் எண்ணெய் வித்துக்கள்,1000 எக்டேர் பருத்தி, 2000 எக்டேர் கரும்பு பயிரிடப்படுகிறது.ஆண்டு சராசரி மழை அளவு எவ்வளவுஆண்டு சராசரி 904 மி.மீ., பதிவாகும். 2020 ல் 1131 மி.மீ., பதிவானது. 2021 ஆகஸ்ட் வரை 441.3 மி.மீ.,
 விவசாயத்தை கண் போல் காக்கும் காப்பீடு.....  2020 ல் ரூ.850 கோடி வழங்கல்

கே.வெங்கடேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர், சிவகங்கை கூறியதாவது:

மாவட்ட அளவில் பயிரிடும் பரப்பு எவ்வளவு

மாவட்ட அளவில் 75,200 எக்டேரில் நெல், 4500 எக்டேரில் சிறுதானியம், 1800 எக்டேர் பயறு வகை, 4460எக்டேர் எண்ணெய் வித்துக்கள்,1000 எக்டேர் பருத்தி, 2000 எக்டேர் கரும்பு பயிரிடப்படுகிறது.

ஆண்டு சராசரி மழை அளவு எவ்வளவு

ஆண்டு சராசரி 904 மி.மீ., பதிவாகும். 2020 ல் 1131 மி.மீ., பதிவானது. 2021 ஆகஸ்ட் வரை 441.3 மி.மீ., பதிவானது. தென்மேற்கு பருவ மழை 309.8 மி.மீ., கிடைக்க வேண்டும். இக்கால கட்டத்தில் 139.34 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. பருவ மழையை பொருத்து தான் பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்.

எந்தளவிற்கு மண் மாதிரி ஆய்வுகள் நடக்கிறது

இந்த ஆண்டில் 5900 மண் மாதிரிகள் எடுத்து நிலத்தின் தரம் அறிந்து அதற்கு ஏற்ப உரங்களை பரிந்துரை செய்கிறோம். மண்வள அட்டையை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறோம்.

விவசாய புதிய திட்டம் வந்துள்ளதா

இந்த பட்ஜெட்டில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமங்களை தேர்வு செய்து தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் கருவேல் மரங்களை அழித்து விளைநிலமாக்கும் திட்டம் அறிவித்துள்ளனர். மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் தலா 5 கிராமங்களை தேர்வு செய்து 60 கிராமங்களில் செயல்படுத்த உள்ளோம். இது தவிர 20 ஏக்கருக்கு ஒரு இடத்தில் ஆழ்துழாய் கிணறு அமைத்து பயிர் செய்ய வழிவகை செய்யப்படும்.

பிரதமரின் கிஷான் திட்டத்தால் பயனடைந்தவர்கள்

இங்கு 1.10 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18000 உதவி தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 180 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.

பயிர் காப்பீடு திட்டம் செயல்படுகிறதா

இந்த ஆண்டுக்கு வாழை, நிலக்கடலைக்கு பயிர் காப்பீடு திட்டம் அறிவித்துள்ளோம். வாழைக்கு மட்டும் பதிவு செய்ய செப்.,15 கடைசி நாள். பதிவினை இ- சேவை மையம், தேசிய வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மேற்கொள்ளலாம். நவ.,15 வரை நெல்லுக்கு காப்பீடு செய்யலாம்.

காப்பீடு தொகை பெற்ற விவசாயிகள்

2020 ம் ஆண்டு 4 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர். அவர்களுக்கு ரூ.832 கோடி இழப்பீடு வழங்கியுள்ளோம். விடுபட்ட விவசாயிகளுக்கு ரூ.15.51 கோடி இழப்பீடு பெற்று தந்துள்ளோம்.

விதை நெல் இருப்பு உள்ளதா

சான்று பெற்ற விதை நெல் 250 டன் வினியோகம் செய்துள்ளோம். தட்டுப்பாடு உள்ள ரகங்களை பிற மாவட்டங்களில் வாங்கி தருகிறோம். சிறுதானியம் 2 டன், பயறு வகை விதை 5700 கிலோ, எண்ணெய் வித்து 3 டன் இருப்பு வைத்துள்ளோம்.

உரங்கள் இருப்பு நிலவரம்

யூரியா 2,100, டி.ஏ.பி., 500, காம்ப்ளக்ஸ் 1000, பொட்டாஷ் 600 டன் இருப்பு உள்ளது. நுண்ணுாட்ட உரங்கள் நெல்லுக்கு 95 ஆயிரம் கிலோ, சிறுதானியங்களுக்கு 12000 கிலோ பயறு வகைகளுக்கு 5000 கிலோ, தென்னைக்கு 10 ஆயிரம் கிலோ, கடலைக்கு 7500 கிலோ இருப்பு வைத்துள்ளோம்.

எத்தனை ஏக்கர் தரிசு நில மேம்பாடு செய்துள்ளீர்கள்

கடந்த 3 ஆண்டில் 2000 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தியுள்ளோம். மேலும் 3 ஆயிரம் ஏக்கர் மேம்படுத்த உள்ளோம்.நீடித்த மானாவாரி வேளாண் திட்டத்தில் பயன்வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 15000 மானாவாரி நிலங்களில் சிறுதானியம், பயறு, கோடை உழவு, இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன திட்ட பயன்பாடு

இதற்கு 2300 எக்டேர் இலக்கு நிர்ணயித்து ரூ.13.1 கோடி வழங்க உள்ளோம். இது வரை 1939 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியம் உண்டு.

செட்டிநாடு வேளாண் கல்லுாரி வந்தால் அதன் பயன்

காரைக்குடி அருகே செட்டிநாடு வேளாண், கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வேளாண் கல்லுாரி துவக்க அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்வதின் மூலம் நவீன வேளாண்மை நடைபெறும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X