இந்தியாவுக்கு எதிராக பாக்.,கை தூண்டிவிட :சீனா சதி| Dinamalar

இந்தியாவுக்கு எதிராக பாக்.,கை தூண்டிவிட :சீனா சதி

Updated : செப் 04, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (2+ 7)
Share
வாஷிங்டன் :''ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சித்து வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக பாக்.கை துாண்டிவிட திட்டமிட்டு உள்ளது'' என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க துாதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தன் படைகளை திரும்பப் பெற்றுள்ளது.இது
இந்தியா, பாக்.,கை துாண்டிவிட :சீனா சதி

வாஷிங்டன் :''ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சித்து வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக பாக்.கை துாண்டிவிட திட்டமிட்டு உள்ளது'' என ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க துாதரும், இந்திய வம்சாவளியைச்
சேர்ந்தவருமான நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தன் படைகளை திரும்பப் பெற்றுள்ளது.இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் நிக்கி ஹாலே கூறியுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதன் வாயிலாக பெரும் வரலாற்று தவறை அதிபர் ஜோ பைடன் செய்துஉள்ளார். படைகளை திரும்பப் பெற்றதால் போர் முடிந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் இனிதான் நிலைமை மோசமாகப் போகிறது.
அமெரிக்கா வெளியேறியதை தலிபான்கள் கொண்டாடுகின்றனர்.

இனி இந்த உலகம் மிகப் பெரும் ஆபத்தை சந்திக்க உள்ளது. உலகெங்கும் உள்ள பயங்கரவாதிகள் இனி வலுப் பெறுவர்.படைகளை திரும்பப் பெற்றதன் வாயிலாக அமெரிக்க ராணுவ வீரர்களின் நம்பிக்கையை பைடன் இழந்துள்ளார். வீரர்களின் திறமையை அவர் குறைத்து மதிப்பிட்டு உள்ளார். இதனால் வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தாரும் அதிருப்தியில் உள்ளனர்.சர்வதேச அரங்கில் நம் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அமெரிக்க மக்களின் நம்பிக்கையையும் பைடன் இழந்துள்ளார்.


நம் நட்பு நாடுகளின் நம்பிக்கையையும் ஜோ பைடன் இழந்துள்ளார். பல நாடுகள் தற்போது நேரடியாக தலிபான்களுடனும் மற்றவர்களுடன் பேசத் துவங்கிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருந்தபோது பக்ராம் விமானப் படை தளமே முக்கிய தளமாக இருந்தது. தற்போது அந்த விமானப் படை தளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா நிச்சயம் முயற்சிக்கும்.
இந்தப் பகுதி பாக்.குக்கு அருகில் உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக வலுவாக போராடும்படி பாக்.கை சீனா தூண்டிவிடும்.இவ்வாறு நம் நட்பு நாடுகள் பலவற்றுக்கும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என நம் நட்பு நாடுகள் அனைத்துக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியில் பைடன் ஈடுபட வேண்டும்.சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X