பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அலுவலருக்கு பயிற்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித்தேர்தல் அலுவலர்களுக்கு செப்.,3 இன்றும், செப்., 6 ல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வேட்பு மனு முதல், வெற்றி அறிவிப்பு வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதற்கான பயிற்சி இன்று செப்., 3 ல் காணொளி மூலமும், செப்., 6ல் முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித்தேர்தல் அலுவலர்களுக்கு செப்.,3 இன்றும், செப்., 6 ல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வேட்பு மனு முதல், வெற்றி அறிவிப்பு வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதற்கான பயிற்சி இன்று செப்., 3 ல் காணொளி மூலமும், செப்., 6ல் முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணினி உதவியாளர், தட்டச்சர்கள் ஒன்றியத்திற்கு ஒருவர் மட்டும். மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் கலந்து கொள்ள வேண்டும், என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் கையேடுகள், திருத்தங்களுடன் நகல் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X