ரேஷனில் தரமான அரிசி; அரவை ஆலைகளில் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் தரமான அரிசி; அரவை ஆலைகளில் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
காரைக்குடி : மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய அரிசி அரவை ஆலைகளில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.மாவட்ட அளவில் உள்ள 820 ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக குடோன் மூலம் அரவைக்கு நெல் வழங்கப்படுகிறது. இவற்றை பள்ளத்துார், புதுவயலில் உள்ள 14 அரிசி ஆலைகள் அரிசியாக அரவை செய்து, கல், கருப்பு நீக்கி தர வேண்டும். ஆனால் பெரும்பாலான ரேஷன்

காரைக்குடி : மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய அரிசி அரவை ஆலைகளில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார்.

மாவட்ட அளவில் உள்ள 820 ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழக குடோன் மூலம் அரவைக்கு நெல் வழங்கப்படுகிறது. இவற்றை பள்ளத்துார், புதுவயலில் உள்ள 14 அரிசி ஆலைகள் அரிசியாக அரவை செய்து, கல், கருப்பு நீக்கி தர வேண்டும். ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி விற்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அரிசி அரவை ஆலைகளில் தரமான அரிசி தயாரிப்பதை உறுதி செய்ய கலெக்டர் மதுசூதன் ரெட்டி விசாரணை செய்தார். மேலும் ரேஷனில் தரமில்லாத அரிசி வழங்கினால் உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் மாற்றி தரப்படும் என்றார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், துணை மேலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X