பொது செய்தி

தமிழ்நாடு

கண்டவராயன்பட்டி வழியே பஸ்கள் இயக்க கோரிக்கை

Added : செப் 02, 2021
Share
Advertisement
கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் ஒன்றியம் கே.வைரவன்பட்டி வழியாக கண்டவராயன்பட்டி பகுதியிலிருந்து திருப்புத்தூர் செல்ல காலை,மாலை பஸ் வசதி ஏற்படுத்த கோரியுள்ளனர்.கண்டவராயன்பட்டி, பழையவளவு, கே.வைரவன்பட்டி பள்ளி மாணவர்கள் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு திருப்புத்துார் செல்கின்றனர். இவர்கள் பொன்னமராவதியிலிருந்து காலை 9:00 மணிக்கு வரும் டவுன் பஸ்சிலும்,

கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் ஒன்றியம் கே.வைரவன்பட்டி வழியாக கண்டவராயன்பட்டி பகுதியிலிருந்து திருப்புத்தூர் செல்ல காலை,மாலை பஸ் வசதி ஏற்படுத்த கோரியுள்ளனர்.

கண்டவராயன்பட்டி, பழையவளவு, கே.வைரவன்பட்டி பள்ளி மாணவர்கள் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு திருப்புத்துார் செல்கின்றனர். இவர்கள் பொன்னமராவதியிலிருந்து காலை 9:00 மணிக்கு வரும் டவுன் பஸ்சிலும், மாலையில் வீடு திரும்புவதற்கு திருப்புத்துாரிலிருந்து மாலை 4:45 மணிக்கு வரும் பஸ்சிலும் வந்தனர். மாணவர்கள் மட்டுமின்றி வெளியூர் வேலைகளுக்கு செல்பவர்களுக்கும் இந்த பஸ்வசதி கிராமத்தினருக்கு உதவியாக இருந்தது.

இரவு 8:00 மணிக்கும் திருப்புத்துாரிலிருந்து இந்த வழித்தடத்தில் பொன்னமராவதிக்கு பஸ் இயங்கியது. தற்போது முற்றிலுமாக இந்த வசதி நிறுத்தப்பட்டு விட்டது.தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கிய தனியார் மினிபேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X