சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த புகார் நடிகர் ஆர்யாவை தப்ப வைக்க முயற்சியா?

Updated : செப் 03, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:ஜெர்மனி நாட்டு பெண் கொடுத்த புகாரில், நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயை வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி, நடிகர் ஆர்யா, அவரது தாய்
 ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த புகார்  நடிகர் ஆர்யாவை தப்ப வைக்க முயற்சியா?

சென்னை:ஜெர்மனி நாட்டு பெண் கொடுத்த புகாரில், நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயை வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி, நடிகர் ஆர்யா, அவரது தாய் ஜமீலா, புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தற்போது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கைது செய்யப் பட்ட இருவரும் ஜாமின் கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஜெர்மனி பெண் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்தன் தாக்கல் செய்த மனு: நடிகர் ஆர்யாவும், அவரது தாயும் ஜெர்மனி பெண்ணிடம் பேசியுள்ளனர். அவரை ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைப்ப தாக கூறி 70.40 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். சினிமா பிரபலம் என்பதால், தன்னால் வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடியாது எனக் கூறி, அவரது நண்பர்கள் வாயிலாக பணம் பெற்று உள்ளார் ஆர்யா.இந்த வழக்கில் ஆர்யா மற்றும் அவரது தாயை தப்பிக்க வைக்கும் முயற்சியாக, முகமது அர்மான், தான் மட்டுமே மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.


latest tamil news


வழக்கில், ஆர்யா, ஜமீலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப் படவில்லை. மேலும், ஜெர்மனி பெண்ணை ஏமாற்றவில்லை என ஆர்யா, அவரது தாய் ஆகியோர் நிரூபிக்கவில்லை. அதேவேளையில், அவர்கள் அமைதியாக இருந்து, மனுதாரர்கள் வாயிலாக வழக்கை நடத்தி வருகின்றனர்.எனவே, வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தி முடிக்கும் வரை இருவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை தொடர்ந்து, மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் ஆர்யா, அவரை சந்தித்துப் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
07-செப்-202117:25:25 IST Report Abuse
visu இல்லை சிறுபிள்ளைத்தனமான புகார் ஆர்யா நேரடியாக பணம் பெறவில்லை அல்லது குற்றவாளிகளுக்கும் ஆர்யாவிற்கும் இடையே பண பரிமாற்றம் நிரூபிக்க படவேண்டும் இல்லாமல் வெறுமனே வாய்வழி புகாருக்காக ஒருவரை குறை சொல்லமுடியாது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08-செப்-202106:57:04 IST Report Abuse
 Muruga Velஎத்தனை பேர்ல கருத்து எழுதுவியோ .....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-செப்-202112:18:55 IST Report Abuse
Bhaskaran பெரியவங்க தப்புசெஞ்சா பெருமாள் செஞ்சமாதிரி காவல்துறை கண்டுக்காது
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
07-செப்-202112:47:37 IST Report Abuse
பெரிய ராசு யாரு இந்த மூர்க்கன் பெரியவனா ? நடிகர் ஆர்யா, அவரது தாய் ஜமீலா, முகமது அர்மான், ஹூசைனி ...திருடர்கள் ...கும்பல் அடித்து முட்டியை உடைக்கவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X