பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.புதூரில் அரசு கல்லூரி அமைக்க தீர்மானம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : எஸ்.புதூர் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எஸ்.புதூர் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயாகுமரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தனர். கணக்கர் சேக் அப்துல்லா தீர்மானங்களை வாசித்தார்.கூட்ட விவாதம்:ராஜாத்தி (3வது வார்டு):ஒன்றிய அலுவலக வளாகத்தில்

சிங்கம்புணரி : எஸ்.புதூர் ஒன்றியத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.எஸ்.புதூர் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயாகுமரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தனர்.

கணக்கர் சேக் அப்துல்லா தீர்மானங்களை வாசித்தார்.கூட்ட விவாதம்:ராஜாத்தி (3வது வார்டு):ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தனிக்கட்டடம் கட்ட வேண்டும்.

இந்திராகாந்தி (4வது வார்டு): எஸ்.புதூர் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி துவக்கப்பட வேண்டும்.

சின்னம்மாள் (6வது வார்டு): மின்னமலைப்பட்டி ஊராட்சி கல்லங்கலப்பட்டியில் புதிதாக நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் செயல்பாடின்றி உள்ளது. வேளாண்மை அலுவலக சுற்றுச்சுவர், கரிசல்பட்டி, தர்மபட்டியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானித்தனர். துணைத்தலைவர் வீரம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி, விஜயா பங்கேற்றனர். மேலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X