பரமக்குடியில் சாக்கடையில் காய்கறி விற்பனை

Added : செப் 02, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி மார்க்கெட் அருகே சாக்கடை ஓரத்தில் காய்கறிகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பரமக்குடி காய்கறி மார்க்கெட் வீதி, உழவர் சந்தை, சின்னக்கடை மார்க்கெட், எமனேஸ்வரம் காய்கறி மார்க்கெட் தெரு என நகராட்சி பகுதி உள்ளது. இப்பகுதிகளில் காலை 7:00 மணி தொடங்கி இரவு 7:00 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை நடக்கிறது.அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும்

பரமக்குடி : பரமக்குடி மார்க்கெட் அருகே சாக்கடை ஓரத்தில் காய்கறிகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பரமக்குடி காய்கறி மார்க்கெட் வீதி, உழவர் சந்தை, சின்னக்கடை மார்க்கெட், எமனேஸ்வரம் காய்கறி மார்க்கெட் தெரு என நகராட்சி பகுதி உள்ளது. இப்பகுதிகளில் காலை 7:00 மணி தொடங்கி இரவு 7:00 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை நடக்கிறது.அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் வாறுகால் சீர் செய்யப்படாமல், சாக்கடை கழிவு அருகில் வியா பாரம் செய்யும் நிலை உள்ளது.

மேலும் தெருவோரங்களில் கழிவுநீர் ஆக்கிரமிப்பால் ரோட்டை மறைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளதால் போக்குவரத்து பாதிக்கிறது. குறுகலான தெருக்கள் கொண்ட மார்க்கெட் பகுதிகளில் நாள் முழுவதும் நெரிசல் தொடர்வதால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X