கழிவு நீரால் புது ரோடு சேதம்| Dinamalar

கழிவு நீரால் புது ரோடு சேதம்

Added : செப் 02, 2021
Share
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி நகர்பகுதியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை கழிவு நீரால் சேதமடைந்து வருகிறது. திருப்பாச்சேத்தியில் ரோட்டின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இதுதவிர ரோட்டின் இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன.இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ரோட்டிலேயே விடுகின்றனர். சாலையிலேயே கழிவு நீர் தேங்கி புதிதாக

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி நகர்பகுதியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை கழிவு நீரால் சேதமடைந்து வருகிறது. திருப்பாச்சேத்தியில் ரோட்டின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர ரோட்டின் இருபுறமும் ஏராளமான வீடுகளும் உள்ளன.இவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ரோட்டிலேயே விடுகின்றனர். சாலையிலேயே கழிவு நீர் தேங்கி புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்து வருகிறது. சாலைகளை கண்காணிக்க போதிய ஊழியர்கள் இல்லாததால் கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்து வருகிறது. ரோட்டில் கழிவு நீரை விடுபவர்கள் மீது நெடுஞ்சாலைத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X