கிளறிய சாலையில் பயணிக்கும் அவலம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெரியபட்டினம் : பெரியபட்டினம் முதல் களிமண்குண்டு, குத்துக்கல் வழியாக 6 கி.மீ., தொலைவிற்கான சாலை பணிகள் கிடப்பில் உள்ளது. பழைய தார் சாலையை கிளறி உள்ளதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.களிமண்குண்டில் துறைமுகம் அமைந்துள்ளதால், ராமநாதபுரம் , பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மீனவர்கள்

பெரியபட்டினம் : பெரியபட்டினம் முதல் களிமண்குண்டு, குத்துக்கல் வழியாக 6 கி.மீ., தொலைவிற்கான சாலை பணிகள் கிடப்பில் உள்ளது. பழைய தார் சாலையை கிளறி உள்ளதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

களிமண்குண்டில் துறைமுகம் அமைந்துள்ளதால், ராமநாதபுரம் , பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன் எடுப்பதற்காக களிமண் கொண்டு பகுதிக்கு வந்து செல்கின்றனர். தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக சாலை பராமரிக்காமல் கிடப்பில் உள்ளதால் மீன் வியாபாரிகள் மீன் வாங்க செல்லாமல் இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.

மீனவர் பஞ்சமுத்து கூறியதாவது:களிமண் குண்டு முதல் குத்துக்கல்வலசை உள்ள சாலையை பணிகளை விரைவாக செயல்படுத்தவும், கட்டையன் பேரன் வலசை ஊரணியின் நடுவே செல்லும் மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.குறைகளை நிவர்த்தி செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X