கிஷான் சம்மான் திட்டம் நிறுத்திவைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிஷான் சம்மான் திட்டம் நிறுத்திவைப்பு

Added : செப் 03, 2021
Share
சிவகங்கை : பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இணையதளத்தில் கட்டுப்பாடுகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.பிரதமரின் விசாயிகளுக்கான உதவித்தொகை ஆண்டு தோறும் நான்கு மாதங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது வரை விவசாயிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை

சிவகங்கை : பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இணையதளத்தில் கட்டுப்பாடுகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் விசாயிகளுக்கான உதவித்தொகை ஆண்டு தோறும் நான்கு மாதங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது வரை விவசாயிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் இணையதளத்தில் விவசாயிகள் உதவித்தொகை பெற எளிதில் பதிவு செய்யும் விதமாக வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. இதில் முறைகேடுகள் நடந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து உண்மையான விவசாயிகள் கண்டறியப்பட்டு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆக., மாதம் முதல் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்வதில் கட்டுப்பாடுகளுடன் புதியதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதிய பயனாளிகள் தேர்வு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் உதவித்தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்தாலும் பயனாளிகள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்களுக்கு இந்த நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது, என விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X