பொது செய்தி

தமிழ்நாடு

உதவி மானியம் உயர்வு அரசாணை வெளியீடு

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:அரசு ஊழியர் பணியின் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி மானியத்தை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக

சென்னை:அரசு ஊழியர் பணியின் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி மானியத்தை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.அதற்கேற்ப, குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கட்டணம் மாதம், 60 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக உயர்த்தப்படும்.

இது, குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களுக்கும் பயனளிக்கும் என, தமிழக அரசின் 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.இத்திட்டம், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X