கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு ஆவணம் மாயம் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகம் முழுதும், 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளன. இது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்'

சென்னை:தமிழகம் முழுதும், 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளன. இது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''1983, 1984, 1989, 1992, 2009ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போயின; இதில் 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன; மீதி 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, ஆவணங்கள் காணாமல் போன 41 வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் யார் என்றும், காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை 13ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X