பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் பதிவு செய்தாலே உடனடி நடவடிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
மாவட்டத்தில் சைபர் கிரைம் பங்குதற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை தவறாக பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரங்கள், போலி நம்பிக்கைகளை ஊட்டி மக்களிடம் இருந்து மர்ம நபர்கள் பணம் பறித்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்டந்தோறும் எனது தலைமையில் தலைமையிலான சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.புகார் அளிக்க என்னென்ன வசதிகள்அனைத்து வகையான சைபர் குற்றங்கள் சம்மந்தமாக
 இணையதளத்தில் பதிவு செய்தாலே உடனடி நடவடிக்கை

மாவட்டத்தில் சைபர் கிரைம் பங்குதற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை தவறாக பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரங்கள், போலி நம்பிக்கைகளை ஊட்டி மக்களிடம் இருந்து மர்ம நபர்கள் பணம் பறித்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்டந்தோறும் எனது தலைமையில் தலைமையிலான சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.

புகார் அளிக்க என்னென்ன வசதிகள்

அனைத்து வகையான சைபர் குற்றங்கள் சம்மந்தமாக புகார் தெரிவிக்க http://cybercrime.gov.in/ என்ற லிங்கை பயன்படுத்தலாம். 155260 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு எண் 04562 252451 க்கும் தெரிவிக்கலாம்.

எந்ததெந்த வகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்

கடன் வந்துள்ளது என வங்கி விவரங்கள் கேட்பது, அலைபேசியில் வரும் குறுந்தகவல்களில் லிங்க் அனுப்பி ஓ.டி.பி., கேட்பது, வேலைவாய்ப்பு, அரசு திட்டங்களில் உதவி செய்வதாக கூறி பணம் பறிப்பது என பலவகைகளில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இவை தவிர ஆபாச படங்களை சித்தரித்து அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளும் சைபர் குற்றங்களாகும்.

சமுக வலைதளங்களில் பாதுகாப்பாக இருக்க

சமுகவலைதளங்களில் உறுப்பினராக சேர்ந்து பயன்படுத்தும் மக்கள் பிற உறுப்பினர்களை நண்பர்களாக ஏற்கும் போது, உண்மை தன்மையை அறிந்து ஏற்க வேண்டும். தேவையற்ற தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

வங்கி விவரங்கள் கேட்பவர்களிடம் இருந்து தப்பிக்க

பொதுவாக எந்த ஒரு வங்கியும் தங்கள் வாடிக்கையாளரிடம் அவர்களுடைய கணக்கு, விவரங்களை அலைபேசி வாயிலாக கேட்பதில்லை. அவ்வாறு வங்கி சார்பாக அழைப்பதாக கூறினால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ, சைபர் கிரைமின் புகார் எண்ணிலோ தெரிவிக்கலாம். அவ்வாறு புகார் அளித்தால் தான் இது போன்றவர்கள் மேலும் பிறருக்கு தொடர்பு கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

வேலை வாங்கி தருவதாக குறுஞ்செய்திகள் வாயிலாக மோசடி நடக்கிறதே

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வேலைவாய்ப்பு அமைப்புகள் ஆகியவை பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பக்கட்டணம் தவிர மற்ற எந்த பணமும் பெறுவதில்லை. மர்ம நபர்கள் வேலைவாய்ப்பு சம்மந்தமாக சமுக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் வாயிலாக வலை விரிக்கின்றனர். எப்போதும் நிறுவன அமைப்புகள், அரசு பொதுத்துறை அமைப்புகள் ஆகியவை முன்னணி ஊடகங்கள், தங்கள் அதிகார பூர்வ இணைய பக்கங்கள் வாயிலாக மட்டுமே அறிவிப்பு வெளியிடுகின்றனர். வேறு வகையில் வந்தால் அது பணம் திருடும் கும்பல் தான்.

மாவட்டத்தில் ஏதேனும் கைது நடவடிக்கைகள் நடந்துள்ளதா

விருதுநகர் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் பெற்று தருவதாக ஏமாற்றிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவர் போன்றோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில வழக்குகளில் எதிரிகளை தேடி பெங்களூரு, மும்பை பகுதிகளுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இணையதளத்தில் பதிவு செய்யும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட அலுவலகத்தில் நவீன சாதனங்கள், சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் இதற்கென இயங்கி வருகின்றனர். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் தங்கள் முகம், இருப்பிட அடையாளங்களை வெளிக்காட்டுவதில்லை. மக்கள் ஏமாறுவதை உணர்ந்தால் உடனடியாக புகார் அளிக்க முன்வர வேண்டும்.

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு என்ன

அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் சைபர் கிரைம் போலீசார் குறித்து தகவல் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தடுக்க தொழில் நிறுவனங்கள், கல்லுாரிகள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் இடத்திலேயே விழிப்புணர்வு செய்ய அழைத்தால் எங்கள் போலீசார் விழிப்புணர்வு செய்வர். அலுவலக எண் 04562 252451 க்கும் தொடர்பு கொள்ளலாம்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X