கட்டி 30 ஆண்டுகள் கடந்தாச்சு... பயன்பாட்டிற்கு வராத தொட்டி| Dinamalar

கட்டி 30 ஆண்டுகள் கடந்தாச்சு... பயன்பாட்டிற்கு வராத தொட்டி

Added : செப் 03, 2021
Share
அருப்புக்கோட்டை : கட்டி 30 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீதொட்டி, அவசர சிகிச்சைக்கு 8 கி.மீ., துாரம் செல்லும் நிலை என , அருப்புக்கோட்டை மாத்திநாயக்கன்பட்டி மக்கள் பாதிக்கின்றனர்.அருப்புக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த சூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது மாத்திநாயக்கன்பட்டி. இங்கு ஆண்கள், பெண்களுக்கு பொது கழிப்பறை இல்லாமல் மக்கள் திறந்தவெளியை நாட

அருப்புக்கோட்டை : கட்டி 30 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீதொட்டி, அவசர சிகிச்சைக்கு 8 கி.மீ., துாரம் செல்லும் நிலை என , அருப்புக்கோட்டை மாத்திநாயக்கன்பட்டி மக்கள் பாதிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த சூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது மாத்திநாயக்கன்பட்டி. இங்கு ஆண்கள், பெண்களுக்கு பொது கழிப்பறை இல்லாமல் மக்கள் திறந்தவெளியை நாட வேண்டியுள்ளது. கழிப்பறை கட்ட இடம் இருந்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை.மக்கள் மருத்துவம், அவசர சிகிச்சைக்கு 8 கி.மீ., துாரம் உள்ள விருதுநகருக்கு தான் செல்ல வேண்டியுள்ளதால்,இங்கு ஆரம்ப சுகாதாரநிலையம் அவசியமாகிறது .

இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் சுற்றுபகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெறுவர். அரசு இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் . இங்கு கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி 30 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X