பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமலே ரோடு; நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அல்லல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரம், சத்தியமூர்த்தி சாலை, பழைய அருப்புக்கோட்டை ரோடு பகுதிகளில் புதியதாக ரோடு போடுவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமலே ரோடு பணியை துவக்கி உள்ளனர்.இதனால் ரோடு அமைத்த சில காலங்களிலே மீண்டும் ரோட்டை துவம்சம் செய்யும் நிலை ஏற்படும். இதனால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும் . இப்பகுதிகளில்

விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரம், சத்தியமூர்த்தி சாலை, பழைய அருப்புக்கோட்டை ரோடு பகுதிகளில் புதியதாக ரோடு போடுவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமலே ரோடு பணியை துவக்கி உள்ளனர்.

இதனால் ரோடு அமைத்த சில காலங்களிலே மீண்டும் ரோட்டை துவம்சம் செய்யும் நிலை ஏற்படும். இதனால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும் . இப்பகுதிகளில் ரோடு போடுவதற்கான பணிகள் துவங்கி மாதங்கள் கடந்துவிட்டது ஆனாலும் பணிகள் முடிந்தபாடில்லை.ரோடு தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதோடு பணிகளும் அப்படியே நிற்கின்றன.

இந்த நேரத்தில் கூட பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படாத வீடுகளுக்கு வழங்கினால் ரோடு போட்டபின் உடைப்பது தவிர்க்கப்படும்.மாதக்கணக்கில் பணிகள் முடிவடையாமல் இருப்பதால் போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஜல்லிகற்களால் இருசக்கரவாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். விருதுநகர் நகராட்சி நிர்வாகம்தான் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X