தமிழ்நாடு

தொடங்கிட்டாங்கய்யா! பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் சாகச பயணம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சிவகாசி : பள்ளி,கல்லுாரிகள் திறக்கப்பட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராமப் பகுதிகளில் பஸ்களின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு, போலீசார் , கல்வி நிறுவனங்களின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமாகிறது.மாவட்டத்தில் நகர்,கிராமப் பகுதிகளில் ஏராளமான அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்றால் நீண்ட நாட்களாக பள்ளி,
 தொடங்கிட்டாங்கய்யா! பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் சாகச பயணம்

சிவகாசி : பள்ளி,கல்லுாரிகள் திறக்கப்பட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராமப் பகுதிகளில் பஸ்களின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு, போலீசார் , கல்வி நிறுவனங்களின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமாகிறது.

மாவட்டத்தில் நகர்,கிராமப் பகுதிகளில் ஏராளமான அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்றால் நீண்ட நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. இந்நிலையில் சுழற்சி முறையில் பள்ளி, கல்லுாரிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மீண்டும் அவரவர் கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றனர்.

பெரும்பான்மையான தனியார் பள்ளி ,கல்லுாரிகளில் மாணவர்கள் வந்து செல்வதற்கு பஸ், வேன் இயக்கப்படுகின்றன. ஆனால் அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்ல அரசு ,தனியார் பஸ்களைத்தான் பயன்படுத்துகின்றனர். பொதுவாக கிராமப் பகுதிகளில் போதிய பஸ் வசதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் இயக்கப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி ஆபத்து என தெரிந்தும் 'நேரத்திற்கு' பள்ளி , கல்லுாரிக்கு செல்கின்றனர். இதற்கு மாணவிகளும் விதிவிலக்கல்ல. இவர்களை பஸ்சின் ஓட்டுநர், கண்டக்டர்களும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நகர் பகுதிகளில் குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறையாவது அரசு ,தனியார் பஸ் உண்டு. இங்கு பஸ்சில் நெருக்கியடித்தொ, படிக்கட்டில் நின்று தொங்கியபடியோ பயணம் செய்ய அவசியம் இல்லை.

இருந்நதாலும் பெரும்பாலான மாணவர்கள் இத்தகைய சாகச பயணத்தை மேற்கொள்கின்றனர். பல கல்வி நிறுவனங்கள் பஸ் இயக்கினாலும் பெரும்பான்மையான மாணவர்கள் வெளி பஸ்களில்தான் சென்று வருகின்றனர். இதிலும் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பஸ் செல்லும்போது திடீரென 'பிரேக்' அடித்தாலோ, வளைவில் சிறிது தடுமாறினாலும் படியில் தொங்கும் மாணவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. பள்ளி, கல்லுாரி துவங்கும் , முடியும் நேரத்தில் போலீசார் , படியில் பயணம் செய்யும் மாணவர்களை எச்சரிக்கலாம். கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோரும் அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும்...........

கண்காணிக்கலாமே

பள்ளி , கல்லுாரி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. போலீசாரும் இவர்களை கண்காணிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வியை போதிப்பதோடு நின்று விடாமல் இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் பஸ்களின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் , சிவகாசி.............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X