ஆந்திர முதல்வர் குடும்பத்தில் அதிகரிக்கும் மோதல்

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் கவுரவ தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி உள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி 2004 - 09 வரை
 ஆந்திர முதல்வர் குடும்பத்தில் அதிகரிக்கும் மோதல்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் கவுரவ தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி உள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி 2004 - 09 வரை இருந்தார்.


புறக்கணிப்பு



இதன்பின் காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி துவக்கினார். அப்போது கட்சி பணியில் ஜெகனின் தாய் விஜயலட்சுமி, சகோதரி ஷர்மிளா ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் ஜெகன்மோகன் ரெட்டி இருந்த போது, 3,000 கி.மீ., துாரத்துக்கு மேல் பாத யாத்திரை மேற்கொண்டு, கட்சியை துடிப்புடன் வைத்திருந்தார் ஷர்மிளா. ஆந்திர முதல்வராக பதவியேற்ற பின், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் குடும்பத்தினர் தலையிடுவதை, ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை.

தன்னை ராஜ்யசபா எம்.பி.,யாக்க வேண்டும் என சகோதரி ஷர்மிளா விடுத்த கோரிக்கையை, ஜெகன்மோகன் நிராகரித்து விட்டார். தாய் விஜயலட்சுமியையும், கட்சி பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டாம் என கூறிவிட்டார். இதனால், ஜெகன் மீது இருவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தெலுங்கானா மாநிலத்தில் தந்தை பெயரில் தனி கட்சி துவக்கப் போவதாக ஷர்மிளா கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

இது, ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிடிக்கவில்லை. ஆனால் தாய் விஜயலட்சுமி, மகளுக்கு ஆதரவு தந்துள்ளார். தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை ஷர்மிளா துவக்கினார். துவக்க விழாவில் விஜயலட்சுமி பங்கேற்றார். இதனால் மகன் - தாய், சகோதரி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக் ஷா பந்தன் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது, ரக் ஷா பந்தன் பண்டிகை நாளில் தன் சகோதரர் ஜெகனுக்கு ஷர்மிளா ராக்கி கட்டுவது வழக்கம். ஆனால் இம்முறை ஜெகனை ஷர்மிளா சந்திக்கவில்லை. இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், ஒய்.எஸ்.ஆர்., நினைவஞ்சலி கூட்டத்துக்கு விஜயலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்க, ராஜசேகர ரெட்டியுடன் நெருக்கமாக இருந்த 300க்கும் அதிகமானோருக்கு விஜயலட்சுமி அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்; ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பவில்லை.

அதனால் இந்நிகழ்ச்சியை ஜெகன் புறக்கணித்தார். பகிரங்கம்கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்துக்கு சென்று, ஜெகன்மோகன் ரெட்டி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, குடும்ப சண்டை பகிரங்கமாக வெடித்துள்ளது.

இது பற்றி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தெலுங்கானாவில் ராஜசேகர ரெட்டிக்கு செல்வாக்கு இருந்தது இல்லை. கணவரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை, ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் தான் விஜயலட்சுமி நடத்தியிருக்க வேண்டும்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? கட்சி மற்றும் ஆட்சியில் குடும்பத்தினர் தலையிடுவதை ஜெகன் மோகன் விரும்பவில்லை. இதை விஜயலட்சுமியும், ஷர்மிளாவும் புரிந்து கொள்ள வேண்டும்.தெலுங்கு தேசம் கட்சியை போல் வாரிசு அரசியல் நடத்துவதை ஜெகன்மோகன் விரும்பவில்லை. இதை ஏற்காமல், அவருக்கு எதிராக அவரது குடும்பத்தினர் போர்க்கொடி துாக்கினால், அவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
03-செப்-202112:34:39 IST Report Abuse
vpurushothaman இங்கேயும் குடும்பமா ? உருப்பட்ட மாதிரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X