தொழிலாளர் சேம நல நிதியம் புதிய விதிமுறை அறிவிப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசு, தொழிலாளர் சேம நல நிதிய சந்தாதாரர் கணக்கை இரு வகையாக பராமரிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.தொழிலாளர் சேம நல நிதியத்தில் தொழிலாளர்கள் மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றன. இந்நிலையில் தொழிலாளர்கள் ஓராண்டில் செலுத்தும் தொகை, வருமான வரி வரம்பின் அடிப்படையில் இரண்டு

புதுடில்லி:மத்திய அரசு, தொழிலாளர் சேம நல நிதிய சந்தாதாரர் கணக்கை இரு வகையாக பராமரிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் சேம நல நிதியத்தில் தொழிலாளர்கள் மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றன. இந்நிலையில் தொழிலாளர்கள் ஓராண்டில் செலுத்தும் தொகை, வருமான வரி வரம்பின் அடிப்படையில் இரண்டு கணக்குகளின் கீழ் பராமரிக்கப்பட உள்ளன.

இதன்படி ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சந்தா செலுத்துவோர் ஒரு பிரிவாகவும், அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்துவோர் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப் படுவர்.இதனால் ஒருவரின் கணக்கில் பெறப்படும் வருவாய், வரி விதிப்புக்கு உட்பட்டதா இல்லையா என்பதை சுலபமாக கண்டறிய முடியும்.

இதன்படி, ஒருவர் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதியத்தில் செலுத்தும் பட்சத்தில், அதற்கான வருவாய்க்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறை, 2022, ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X