பொது செய்தி

இந்தியா

2 'டோஸ்' கட்டாயம்: அரசு அறிவிப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:'விழா நடக்கும் இடங்களில் கூட்டம் சேர்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்ல விரும்புவோர் தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நம் நாட்டில் பண்டிகை காலம் துவங்க இருப்பதால், அது கொரோனா தொற்று பரவலை மீண்டும் வேகமெடுக்க வழிவகுக்கலாம் என

புதுடில்லி:'விழா நடக்கும் இடங்களில் கூட்டம் சேர்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்ல விரும்புவோர் தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் பண்டிகை காலம் துவங்க இருப்பதால், அது கொரோனா தொற்று பரவலை மீண்டும் வேகமெடுக்க வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னும் இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை. நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டன. 54 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் போடப்பட்டு விட்டது.

சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது.பண்டிகைக் காலம் துவங்க உள்ளதால் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே மக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். விழா நடக்கும் பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். அதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்ல விரும்புவோர், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X