கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு வக்கீல் நியமனம் எதிர்த்த வழக்கில் 'நோட்டீஸ்'

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை:அரசு வழக்கறிஞர்கள் நியமன அறிவிப்பிற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், தமிழக அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம், 'அரசியல் ரீதியான நியமனங்களை

மதுரை:அரசு வழக்கறிஞர்கள் நியமன அறிவிப்பிற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், தமிழக அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம், 'அரசியல் ரீதியான நியமனங்களை தவிர்க்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான விதிகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. அறிவிப்பு செய்து, விண்ணப்பங்கள் பெற்று பரிசீலித்து நியமனம் மேற்கொள்ள விதிகள் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், 'அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்' என உத்தரவிட்டது

.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மேற்கொள்ள, ஜூலையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அது விதிகளுக்கு முரணானது. அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, 'தமிழக தலைமைச் செயலர், பொதுத் துறை செயலர், சட்டத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அக்., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X