கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலை கைதி விடுப்பு கோரி வழக்கு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி விடுப்பு கோரியதில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் என் மகன் ரவிச்சந்திரன், ஆயுள் கைதியாக 28 ஆண்டுகள் சிறையில் உள்ளார். ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேரை விடுதலை

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி விடுப்பு கோரியதில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் என் மகன் ரவிச்சந்திரன், ஆயுள் கைதியாக 28 ஆண்டுகள் சிறையில் உள்ளார். ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018ல் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது.

அவர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். என் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உடன் இருந்து கவனித்துக் கொள்ள ரவிச்சந்திரனுக்கு விடுப்பு கோரி, தமிழக அரசுக்கு ஜூனில் மனு அனுப்பினேன். தண்டனை விதிப்பு நிறுத்த விதிகள்படி, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதங்கள் விடுப்பு வழங்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு, 'தமிழக உள்துறை - சிறைத்துறை முதன்மை செயலர்கள், ஆறு வாரங்களில் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X