மூடப்படும் ஓட்டல்கள்: ஆபத்தில் 10 லட்சம் குடும்பங்கள்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (64) | |
Advertisement
கொரோனா பாதிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நேரடியாக 10 லட்சம் குடும்பங்களும், மறைமுக மாக 10 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார், மாநில தலைமை செயலர் - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்:குறைந்தபட்சம், 20 சதவீத லாபம் கிடைக்கும் என்ற கருத்தில், ஏராளமானோர் ஓட்டல்
மூடப்படும் ஓட்டல்கள்: ஆபத்தில் 10 லட்சம் குடும்பங்கள்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நேரடியாக 10 லட்சம் குடும்பங்களும், மறைமுக மாக 10 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜ்குமார், மாநில தலைமை செயலர் - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்:



குறைந்தபட்சம், 20 சதவீத லாபம் கிடைக்கும் என்ற கருத்தில், ஏராளமானோர் ஓட்டல் தொழிலுக்கு வந்தனர். பலர் அதில் புதுமைகளை புகுத்தினர். 'பிராண்ட்' உருவாக்கி, அதன் கிளைகளை பல இடங்களில் ஏற்படுத்தினர். பொதுவான ஒரு இடத்தில் சமையல் கூடம் அமைத்து, அங்கே சமைத்து கிளைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், உற்பத்தி செலவு குறைந்தது. வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்தில் ஆட்கள் வேலைக்கு வரவழைக்கப்பட்டனர். 'ஸ்விக்கி, சுமாட்டோ' போன்ற இணைதள சேவை வாயிலாக உணவு களை, 'டோர் டெலிவரி' செய்ததால், ஓட்டல் தொழில் செழிப்பாகவே இருந்தது.


சீனிவாசராஜா, உரிமையாளர் - அடையாறு ஆனந்த பவன்:



இந்தியா முழுதும் அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்துக்கு, 140க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தன. அதில், 10 சதவீதம் மூடப்பட்டு விட்டது. எங்கள் ஓட்டல்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் பலர் வேலை இழந்துள்ளனர். ஓட்டல்கள் மூடப்பட்டு, வியாபாரம் இல்லாவிட்டாலும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க வேண்டும். வாடகையை குறைக்க கட்டட உரிமையாளர்கள் மறுக்கின்றனர். வியாபாரம் இல்லாமல் பல லட்சம் ரூபாயை, எப்படி வாடகையாக கொடுக்க முடியும்?கொரோனா காலத்திலும், அரசுக்கு அனைத்து வரிகளையும் முழுமையாக செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.அத்துடன் தாள முடியாத கடன் சுமை. மேலும், முன்பை போல ஓட்டலுக்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர். இதனால், பழைய வர்த்தகம் இல்லை. முன்பு இருந்ததில், 20 சதவீதம் அளவுக்கு தான் வர்த்தகம் நடக்கிறது; செலவுகளோ குறையவில்லை; 5 சதவீத லாபம் கூட கிடைக்கவில்லை. ஓட்டல் தொழிலில் ஜாம்பவானாக அறியப்பட்ட, சரவண பவன் நிர்வாகமே தடுமாறி, தங்களுடைய பல கிளைகளை மூடிவிட்ட போது, சாதாரண ஓட்டல் தொழில் அதிபர்களின் நிலை மிக மோசம்.


latest tamil news




ரவி, உரிமையாளர் - வசந்த பவன் ஓட்டல்கள்:



வருமான வரி, ஜி.எஸ்.டி., வரி, கடனுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு, திருப்பி செலுத்தும் காலத்தை அதிகரிப்பது, வட்டி விகிதத்தை குறைப்பது என எந்த சலுகையையும், ஓட்டல் அதிபர்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. சொத்து வரி, தண்ணீர் வரி, கழிவு நீர் வரி, மின்சார கட்டணம் என எதிலும், மூடி கிடந்த ஓட்டல்களுக்கு சலுகை கொடுக்கப்படவில்லை. ஓட்டல் தொழிலையும், அதை நம்பி இருக்கும், ௧௦ லட்சம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என அரசு நினைத்தால், தகுந்த நிபுணர் குழு அமைத்து, ஓட்டல் தொழிலில் இருப்போரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தாமோதரன், மேலாளர் - சரவண பவன் ஓட்டல்கள்:



பெரும்பாலான ஓட்டல்கள், வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. இவர்களுக்கு தான் கொரோனா காலத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கார், வீடு வாங்க கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி, 6 சதவீதம். ஆனால், தொழிலுக்கு கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி, 14 சதவீதம். அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் என பல நாடுகளில், தொழில் கடனுக்கான வட்டி 4 சதவீதம் தான். ஓட்டல் தொழில் நசிவடைவதால், நேரடியாக 10 லட்சம் குடும்பங்களும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் - -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (64)

M Ramachandran - Chennai,இந்தியா
07-செப்-202109:56:28 IST Report Abuse
M  Ramachandran அரசு முனைப்புடன் செயல் பட்டு அந்த ஹோட்டல் தொழிலை நசிந்து விடாமல் பல லட்ச தொழிலார்கள் நினைவில் வைத்து கொண்டு விரைந்துஞ் செயல் படுத்த வேண்டும். கொரானா காலத்தில் பலர் தங்கள் வாழ்க்கையிழந்து நலி வடைந்துள்ளார்கள். அவர்கள் மனா புண்ணுக்கு தேனை என்ன என்பதாய் நிறுபினர் குழு அமைத்து அரசு அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். நாமும் தெரிந்ததே சென்னையை விட்டு பிழைப்பைதேடி அல்லது அவர்கள் சொந்த ஊருக்கு ஆறு லட்சம் பேர்கள் வெளியேறிவிட்டனர். இது ஒரு கடின காலம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
06-செப்-202119:23:20 IST Report Abuse
unmaitamil இவனுங்க அரசை குறை சொல்வதை நிறுத்த மாட்டானுங்க. திருந்தவே மாட்டானுங்க. வரும் லாபத்தில்தான் வருமான வரி கட்டவேண்டும். நஷ்டத்தில் எவனும் வருமான வரி கட்டவேண்டியதில்லை. மக்களிடம் தனியாக வாங்கும் GST,யை தான் இவர்கள் அரசுக்கு கட்டவேண்டும். அதற்க்கு ஏன் வரி விலக்கு தேவை. இதுதான் இவர்கள் ஏமாற்றும் வேலை. கோடி கோடியாக சம்பாதிக்கும்போது மக்கள் நலனுக்காக விலையை குறைத்தார்களா ??? தொழில் செய்ய முடியாவிட்டால் ஹோட்டல் நடத்தவேண்டும். சிறு முதலாளிகள் கடைகளை தொடங்கட்டும். மக்களுக்கும் பலன் கிடைக்கும். இரண்டு இடடலி பத்து ரூபாய்க்கும், தோசை இருப்பது ரூபாக்கும் கொடுக்க பல சிறு ஹோட்டல்கல் தொடங்கட்டும். இந்த கார்பொரேட் ஹோட்டல்கள் ஒழியட்டும்.
Rate this:
Cancel
DINESH ARAVINDH B - COIMBATORE,இந்தியா
06-செப்-202117:23:52 IST Report Abuse
DINESH ARAVINDH B கொள்ளை அடித்து கொண்டிருந்த கொள்ளை லாபம் குறைந்து விட்டது.அதனால் விலையேற்றத்திற்கான மறைமுக அறிவிப்பே இது, கௌரி சங்கர் ஹோட்டல் இருக்கும் அதே கோயம்புத்தூரில்தான் சாந்தி கியர்ஸ் நிறுவனம் சாந்தி சோசியல் சேவை - சாந்தி கேன்டீன் நடத்துகிறது. ரூ.25-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்தாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது.மேலும் சாந்தி கியர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியை தாங்களே செலுத்தி பேரன்பு காட்டியது.ஒரு பிரியாணி, ஒரு சப்பாத்தி செட், ஒரு பூரி செட், ஒரு உளுந்தை வடை, ஒரு பில்டர் காபி சாப்பிட்டவருக்கு வந்த பில் ரூ.25 மட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X