நெகட்டிவ் இல்லாத ஆசிரியர்கள் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நெகட்டிவ்' இல்லாத ஆசிரியர்கள் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

Added : செப் 03, 2021
Share
ஊட்டி:கேரளாவில் இருந்து, கொரோனா 'நெகட்டிவ்' சான்று இல்லாமல் தமிழக பள்ளிகளுக்கு பணிக்கு வந்த 10 ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தமிழக - -கேரள எல்லையான, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பலர் எவ்வித பரிசோதனையும்
 'நெகட்டிவ்' இல்லாத ஆசிரியர்கள் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

ஊட்டி:கேரளாவில் இருந்து, கொரோனா 'நெகட்டிவ்' சான்று இல்லாமல் தமிழக பள்ளிகளுக்கு பணிக்கு வந்த 10 ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தமிழக - -கேரள எல்லையான, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பலர் எவ்வித பரிசோதனையும் இல்லாமல் பள்ளிகளுக்கு வந்தனர்.இதையறிந்த அதிகாரிகள், 'கேரளாவில் இருந்து வரும் போது, பரிசோதனை சான்று எடுத்து வர வேண்டும்' என, அறிவுறுத்தினர்.

எனினும், நேற்று 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 'கோவிட்' சான்று ஏதுமின்றி பள்ளிகளுக்கு வேலைக்கு வந்தனர்.அதிகாரிகள் நேற்று காலை 7:00 மணி முதல் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரிந்தது. தொடர்ந்து 10 ஆசிரியர்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தாசில்தார் குப்புராஜ் கூறுகையில், ''கொரோனா விதிகளை மீறி, சான்று இல்லாமல், தமிழக எல்லைக்குள் நுழையும் ஆசிரியர்கள், டிரைவர்கள், பொதுமக்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X