கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் கணவர் மரணம்: ரூ.1 கோடி கேட்டு மனைவி வழக்கு

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை:அரசு மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால், ஓய்வு பெற்ற ஊழியர் மரணம் அடைந்தார். 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: என் கணவர் ராமதாஸ். சிவகங்கை ஆர்.டி.ஓ.,வின் தனி உதவியாளராக பணிபுரிந்து, 2006ல் ஓய்வு பெற்றார். வயது மூப்பால் உடல்நலம்

மதுரை:அரசு மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால், ஓய்வு பெற்ற ஊழியர் மரணம் அடைந்தார். 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: என் கணவர் ராமதாஸ். சிவகங்கை ஆர்.டி.ஓ.,வின் தனி உதவியாளராக பணிபுரிந்து, 2006ல் ஓய்வு பெற்றார். வயது மூப்பால் உடல்நலம் பாதித்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஜூன் 21ல் அனுமதிக்கப் பட்டார்.அங்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. காலாவதியான குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்தப்பட்டது.

என் கணவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு, ஜூன் 27ல் இறந்தார். காலாவதியான மருந்து செலுத்தப்பட்டதே என் கணவர் மரணத்திற்கு காரணம். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.'டீன்' மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்

.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, சுகாதாரத் துறை செயலர், சிவகங்கை கலெக்டர், சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, செப்., 23ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X