சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரி துவங்க தீக்குளித்த தொழிலாளி

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:மணல் குவாரி துவங்க வலியுறுத்தி, மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரியலுார் மாவட்டம், உதயநத்தம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 40; மாட்டு வண்டி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், 'மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாக துவங்கி, மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க

பெரம்பலுார்:மணல் குவாரி துவங்க வலியுறுத்தி, மாட்டு வண்டி தொழிலாளி தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலுார் மாவட்டம், உதயநத்தம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 40; மாட்டு வண்டி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், 'மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாக துவங்கி, மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்' என கோஷமிட்டுக் கொண்டே, தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

படுகாயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில், இவரது மாட்டு வண்டி, தா.பழூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X