சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஈரோடு:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லக்காபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, 60; தறி பட்டறை தொழிலாளி. திருமணமாகாதவர். சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.மொடக்குறிச்சியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன் வீட்டின் முன்புறம், 2018ல் விளையாடி கொண்டிருந்தார். சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச்
 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு

ஈரோடு:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லக்காபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, 60; தறி பட்டறை தொழிலாளி. திருமணமாகாதவர். சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.மொடக்குறிச்சியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன் வீட்டின் முன்புறம், 2018ல் விளையாடி கொண்டிருந்தார். சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, தங்கராசு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து, தங்கராசுவை கைது செய்தனர். இவ்வழக்கு, ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி மாலதி விசாரித்து, தங்கராசுவுக்கு, 'போக்சோ' பிரிவில், 20 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், மிரட்டல் விடுத்தலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X