மகள் பலாத்காரம்: கொடூர தந்தை கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் பலாத்காரம்: கொடூர தந்தை கைது

Added : செப் 03, 2021
Share
கோத்தகிரி:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிபவர், 47 வயதான கூலித் தொழிலாளி. இவர் ஆக., 23ல் தன் 15 வயது மகளை தொழிற்சாலையை காட்டுவதாக அழைத்து சென்றுள்ளார்.அங்கு யாரும் இல்லாத நேரத்தில்,மகளின் கை, கால்களை கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இரு நாட்களுக்கு முன், உறவினர்கள்

கோத்தகிரி:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிபவர், 47 வயதான கூலித் தொழிலாளி. இவர் ஆக., 23ல் தன் 15 வயது மகளை தொழிற்சாலையை காட்டுவதாக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு யாரும் இல்லாத நேரத்தில்,மகளின் கை, கால்களை கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இரு நாட்களுக்கு முன், உறவினர்கள் வாயிலாக, 'சைல்ட் லைன்' அமைப்புக்கு சம்பவம் தெரிந்தது. குன்னுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்ததில், தந்தை, உண்மையை ஒப்பு கொண்டார். தந்தையை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X