சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியைக்கு தொற்று கடலுாரில் பரபரப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்:பள்ளிகள் திறந்த நிலையில், கடலுாரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 1ம் தேதி திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன.அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 94

கடலுார்:பள்ளிகள் திறந்த நிலையில், கடலுாரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 1ம் தேதி திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன.அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 94 சதவீதம் பேர், தடுப்பூசி போட்டுள்ளனர்.

கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளியில் பணிக்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியை ஒருவர், உடல்நிலை சரியின்றி இருந்தார். அவர், கொரோனா பரிசோதனை செய்த நிலையில், உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். அந்த ஆசிரியைக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆசிரியை, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுள்ளார். உடல் நலம் பாதித்த ஆசிரியை பாடம் எடுக்க செல்லவில்லை. ஓய்வறையில் இருந்தார். 'இதனால், சக ஆசிரியைகள்மற்றும் மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆசிரியை இருந்த அறை, கிருமிநாசினியால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X