பன்னீர்செல்வம் மனைவி உடல் பெரியகுளத்தில் தகனம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம் மனைவி உடல் பெரியகுளத்தில் தகனம்

Added : செப் 03, 2021
Share
பெரியகுளம்:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல், பெரியகுளம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, 66 மாரடைப்பால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு, தேனி மாவட்டம், பெரியகுளம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
 பன்னீர்செல்வம் மனைவி உடல்  பெரியகுளத்தில் தகனம்

பெரியகுளம்:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல், பெரியகுளம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, 66 மாரடைப்பால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு, தேனி மாவட்டம், பெரியகுளம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கட்சியினர், தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று மதியம்1:20 வரை அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், நேற்று காலை 9:50 மணிக்கு அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன், அமைப்பு செயலர் கேசவவிநாயகம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தியாகராஜன், முத்துசாமி, தேனி கலெக்டர் முரளீதரன் அஞ்சலி செலுத்தினர். பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப், மகள் கவிதாபானு, குடும்பத்தினர் ஒரு மணி நேரம் சடங்குகள் செய்தனர். வீட்டில் இருந்து விஜயலட்சுமி உடல், மதியம் 1:20 மணிக்கு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

தேவர் சிலை அருகே, அவர்களது பூர்வீக வீட்டின் முன் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மதியம் 2:30 மணிக்கு, உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம், சீடர்கள் 45 நிமிடங்கள் நமசிவாய நாமம் பாடினர்.இறுதி சடங்கிற்குப் பின் 3:25 மணிக்கு ரவீந்திரநாத், தாயின் உடலுக்கு தீ மூட்டினார். பெரியகுளத்தில் காலை முதல் மதியம் வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X