சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: எஸ்.பி., நேரடி விசாரணை

Added : செப் 03, 2021
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரை அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர் ஜி.முருகானந்தத்தை 39, டூவீலரில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் வழக்கறிஞர் ஜி.முருகானந்தம். இவர் அ.ம.மு.க.,செய்தி தொடர்பாளராக உள்ளார். இவரது அலுவலகம் மானாமதுரை நீதிமன்றம் அருகே உள்ளது. நேற்று அவரது அலுவலகத்தில் சக வழக்கறிஞர்களுடன்
 மானாமதுரை வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: எஸ்.பி., நேரடி விசாரணை

மானாமதுரை:மானாமதுரை அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர் ஜி.முருகானந்தத்தை 39, டூவீலரில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் வழக்கறிஞர் ஜி.முருகானந்தம். இவர் அ.ம.மு.க.,செய்தி தொடர்பாளராக உள்ளார். இவரது அலுவலகம் மானாமதுரை நீதிமன்றம் அருகே உள்ளது. நேற்று அவரது அலுவலகத்தில் சக வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். மதியம் 12:40 மணிக்கு டூவீலரில் அரிவாள், வாளுடன் வந்த 4 பேர் கும்பல் இவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் அவரது தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., செந்தில்குமார் பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்தார். கூடுதல் எஸ்.பி., முரளீதரன், டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் ஆகியோர் வழக்கறிஞரை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.நீதிமன்றம் அருகே பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X