சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 ஆயிரம் லஞ்சம் மின் பொறியாளர் கைது

Added : செப் 03, 2021
Share
Advertisement
போடி:ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேனி மாவட்டம் போடி டவுன் உதவி மின் பொறியாளர் சுருளியப்பனை 44, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.போடி போஜன் பார்க் அருகே சீனிவாசன் நகரில் வசிப்பவர் மகேந்திரன் 43. முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது வீட்டையொட்டி சென்ற மின்ஒயரை மாற்றி அமைக்க போடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் 8 மாதத்திற்கு முன் மனு கொடுத்தார். ரூ.22 ஆயிரம் கட்டினார்.மின்ஒயர்
 ரூ.5 ஆயிரம் லஞ்சம் மின் பொறியாளர் கைது

போடி:ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேனி மாவட்டம் போடி டவுன் உதவி மின் பொறியாளர் சுருளியப்பனை 44, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

போடி போஜன் பார்க் அருகே சீனிவாசன் நகரில் வசிப்பவர் மகேந்திரன் 43. முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது வீட்டையொட்டி சென்ற மின்ஒயரை மாற்றி அமைக்க போடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் 8 மாதத்திற்கு முன் மனு கொடுத்தார். ரூ.22 ஆயிரம் கட்டினார்.

மின்ஒயர் மாற்றியமைக்க உதவி மின்பொறியாளர் சுருளியப்பன் ரூ.5 ஆயிரம் மகேந்திரனிடம் கேட்டார். தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று மதியம் 12:00 மணியளவில் மின்வாரிய அலுவலகத்தில் மகேந்திரன், ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சுருளியப்பனிடம் கொடுத்தார். அவரை டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X