சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு வாகனம் - பஸ் மோதல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம்-அரசு பஸ் மீது தனியார் கம்பெனி தீயணைப்பு லாரி மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். இதனால் கடலுார் - சிதம்பரம் நெடுஞ் சாலையில் 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தனியார் கம்பெனிக்கு சொந்தமான டி.என்.31.பி.க்யூ. 6028 எண்ணுள்ள தீயணைப்பு லாரியை சேந்திரக்கிள்ளையைச் சேர்ந்த அமரன், 43; என்பவர் வடலுார் ஒர்க் ஷாப்புக்கு ஓட்டிச்
 தீயணைப்பு வாகனம் - பஸ் மோதல்

புதுச்சத்திரம்-அரசு பஸ் மீது தனியார் கம்பெனி தீயணைப்பு லாரி மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். இதனால் கடலுார் - சிதம்பரம் நெடுஞ் சாலையில் 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தனியார் கம்பெனிக்கு சொந்தமான டி.என்.31.பி.க்யூ. 6028 எண்ணுள்ள தீயணைப்பு லாரியை சேந்திரக்கிள்ளையைச் சேர்ந்த அமரன், 43; என்பவர் வடலுார் ஒர்க் ஷாப்புக்கு ஓட்டிச் சென்றார். புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு 5 கண் மதகு அருகே மாலை 4.30 மணிக்கு சென்ற போது, கடலுாரிலிருந்து சிதம்பரம் சென்ற டி.என்.32.என்.4278 எண்கொண்ட அரசு பஸ் மீது மோதி விபத்துக்குளானது.இதில் தீயணைப்பு லாரி டிரைவர் அமரன், பஸ் டிரைவர் சின்னக்கண்ணாடியைச் சேர்ந்த சிவக்குமார், 42; ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த கண்டக்டர் நாராயணசாமி, 40; பஸ்சில் வந்த 10 பயணிகள் உட்பட 13 பேர் லேசான காயமடைந்தனர். தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் சென்று காயமடைந்த அமரன், சிவக்குமார், நாராயணசாமி உட்பட 7 பேரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கும், மீதமுள்ள 6 பேரை சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் அனுப்பினர்.இந்த விபத்தால் கடலுார் - சிதம்பரம் சாலையில் இரு புறமும் போக்குவரத்து பாதித்தது. ஆலப்பாக்கம், பெரியக்குப்பம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சாலையின் குறுக்கே நின்ற தீயணைப்பு லாரி மற்றும் பஸ்சை ஜே.சி.பி., மற்றும் கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி, மாலை 6.00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் 1.30 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த திடீர் விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X