சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான, செம்மண் குவாரி வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ம் ஆண்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை

விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான, செம்மண் குவாரி வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ம் ஆண்டு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று நடந்த விசாரணையில், அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை.இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை 4ம் தேதிக்கு, ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.மற்றொரு வழக்குவானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் விதி மீறி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி., மற்றும் கோத குமார், ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தன், லோகநாதன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்ததால், வழக்கில் இருந்து நீக்கப்பட்டார்.நேற்று நடந்த இவ்வழக்கு விசாரணையில், கோபிநாத் மட்டும் ஆஜரானார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகவில்லை.இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X