சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண்ணை மிரட்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

Added : செப் 03, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-புவனகிரி அருகே இளம்பெண்ணிடம், அத்துமீறி மிரட்டிய வாலிபருக்கு, 5 ஆண்டு, 4 மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 9, 500 அபராதம் விதிக்கப்பட்டது.புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி, 21; இவர், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி, வடலுாரில் இருந்து சொக்கன் கொள்ளை பஸ் நிறுத்தத்தில், பஸ்சில் இருந்து கீழே இறங்கி வீட்டிற்கு நடந்துச் செல்லும்

பரங்கிப்பேட்டை-புவனகிரி அருகே இளம்பெண்ணிடம், அத்துமீறி மிரட்டிய வாலிபருக்கு, 5 ஆண்டு, 4 மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 9, 500 அபராதம் விதிக்கப்பட்டது.புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி, 21; இவர், கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி, வடலுாரில் இருந்து சொக்கன் கொள்ளை பஸ் நிறுத்தத்தில், பஸ்சில் இருந்து கீழே இறங்கி வீட்டிற்கு நடந்துச் செல்லும் போது, சாத்தப்பாடி இந்திரா நகரை சேர்ந்த வெள்ளையன் என்ற சுந்தரவேல், 30; மகேஸ்வரியை, வழிமறித்து ஆபாசமாக திட்டி, கட்டிப்பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, வெள்ளையனை கைது செய்தனர். இந்த வழக்கின் மேல்விசாரணை பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் முகமது சையது உசேன் குற்றம்சாட்டப்பட்ட வெள்ளையனுக்கு, 5 ஆண்டு, 4 மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 9, 500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X