மதுரை:மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தில் ஆண்டிப்பட்டி - தேனி இடையே 17 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் நாளை (செப். 4) காலை 11:30 முதல் மதியம் 1:00 மணி வரை 120 கி.மீ.வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இத்திட்டத்தில் மதுரை ஆண்டிப்பட்டி இடையே 58 கி.மீ. துாரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். தற்போது ஆண்டிப்பட்டி - தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் ஆக. 4 ல் 90 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் நாளை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் கட்டுமான பிரிவு இணை பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடக்கிறது.
எனவே பொதுமக்கள் நாளை ரயில் பாதையை கடக்கவோ நெருக்கவோ கூடாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சோதனை ஓட்டத்திற்கு பின் தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு கமிஷனர் இம்மாத இறுதிக்குள் ஆய்வு செய்து ஒப்பதல் கிடைத்ததும் தேனி வரை ரயில்கள் இயக்கப்படும். மீதமுள்ள தேனி - போடி இடையே 15 கி.மீ. துாரத்திற்கான பணிகள் விரைவாக நடக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE