சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் பெண் பயணியிடம் 13 சவரன் நகை 'அபேஸ்'

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் மனைவி கிரிஜா, 33; இவர் கடந்த மாதம் 19ம் தேதி தனது கைக்குழந்தையுடன் கடலுாரில் உள்ள சகோதரியை பார்க்க அரசு பஸ்சில் வந்தார். பஸ் கெடிலம் வந்தபோது, அங்கு 35 வயது பெண் கைக் குழந்தையுடன் ஏறி, கிரிஜா அருகில் அமர்ந்தார். அப்போது, அவர் கையில் இருந்த சில்லரை காசுகளை எடுக்குமாறு கிரிஜாவிடம்

கடலுார்-கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் மனைவி கிரிஜா, 33; இவர் கடந்த மாதம் 19ம் தேதி தனது கைக்குழந்தையுடன் கடலுாரில் உள்ள சகோதரியை பார்க்க அரசு பஸ்சில் வந்தார். பஸ் கெடிலம் வந்தபோது, அங்கு 35 வயது பெண் கைக் குழந்தையுடன் ஏறி, கிரிஜா அருகில் அமர்ந்தார். அப்போது, அவர் கையில் இருந்த சில்லரை காசுகளை எடுக்குமாறு கிரிஜாவிடம் கூறியுள்ளார். பின், அப்பெண் பண்ருட்டி மளிகை கடை பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.கிரிஜா கடலுார் வந்து, கைப்பையை பார்த்தபோது, அதில் இருந்த செயின், மாட்டல், வளையல் உள்ளிட்ட 13 சவரன் நகைகளை காணவில்லை. கிரிஜா புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X