இந்தியா

இழப்பு ; அரசு துறைகளில் ரூ.27.88 கோடி...தணிக்கை அறிக்கையில் 'பகீர்'

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி, செப். 3-புதுச்சேரி அரசால் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடான ரூ.712.39 கோடியில், வெறும் 0.16 சதவீதம்மட்டுமே வருவாய் பெறப்பட்டுள்ளது, மத்திய தணிக்கைஅறிக்கையில் அம்பலமாகி உள்ளது.புதுச்சேரி அரசின் 2018-19, 2019-20 ஆண்டிற்கான நிதி நிலைமை குறித்து, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.அதில்,

புதுச்சேரி, செப். 3-புதுச்சேரி அரசால் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடான ரூ.712.39 கோடியில், வெறும் 0.16 சதவீதம்மட்டுமே வருவாய் பெறப்பட்டுள்ளது,

மத்திய தணிக்கைஅறிக்கையில் அம்பலமாகி உள்ளது.புதுச்சேரி அரசின் 2018-19, 2019-20 ஆண்டிற்கான நிதி நிலைமை குறித்து, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.அதில், கடந்த 2019-20ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையின் முக்கிய அம்சம்:புதுச்சேரியின் வருவாய் வரவினங்கள் 2019-20 ல் ரூ.6,781 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ. 6,836 கோடியாகவும் இருந்தது. ரூ.55 கோடி வருவாய் பற்றாக்குறையாக முடிந்தது.கடந்த 2018-19 ல் ரூ.316 கோடியாக இருந்த மூலதன செலவினம் 2019-20ல் ரூ.327 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2018-19ல் ரூ.302 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 2019-20ல் ரூ. 381 கோடியாக அதிகரித்தது.கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை ரூ.1,101 கோடி வருவாய் வரவேண்டி உள்ளது. அதில், ரூ.517 கோடி ஐந்தாண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ளது.பல்வேறு துறைகளில் அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ. 114 கோடி முன்பணங்கள் கணக்கில் சரிகட்டப்படாமல் உள்ளது. இதில், ரூ.15.75 கோடிக்கான முன் பணங்கள், 10 ஆண்டிற்கு மேலாக கணக்கு சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.மாநிலத்தில் 71 அரசு அமைப்பு குழுமங்களில், 53 குழுமங்களில் இருந்து 2018-19 வரை தணிக்கை கணக்கு பெறவில்லை.

மார்ச் 2020 வரை பல்வேறு அரசு துறைகளில் 317 இனங்களில் ரூ.27.88 கோடி இழப்பு மற்றும் முறைகேடு, செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.புதுச்சேரி அரசால், பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடான ரூ.712.39 கோடியில், ஆதாய பங்காக பெறப்பட்ட வருவாய் வெறும் 0.16 சதவீதம் மட்டுமே ஆகும்.ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 28.05 கோடி லாபத்தையும், ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.52.37 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இவை ரூ. 24.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கடன் பொறுப்புகடந்த 2015-16ல் ரூ.7,754 கோடியாக இருந்த நிலுவையில் உள்ள கடன்கள், 2019-20ல் ரூ. 9,449 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2019-20 நிதி ஆண்டின் மொத்த கடன் வரவினமான ரூ.1043 கோடி யில், கடன்களை திரும்ப செலுத்துவதற்கு ரூ.762 கோடி (73.06 சதவீதம்) பயன்படுத்தப்பட்டது.மீதமுள்ள ரூ. 281 கோடி மட்டுமே மூலதன செலவினத்திற்காக கிடைத்துள்ளது. மொத்த கடனில் 72.51 சதவீதம் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X