பொது செய்தி

இந்தியா

அறிவியல் படைப்புகள் உருவாக்கிய ஆச்சார்யா மாணவர்களுக்கு பாராட்டு

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதிய அறிவியல் படைப்புகள் உருவாக்கிய வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்னர்.ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள், அண்மையில் 3 அறிவியல் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.இவற்றை, ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கல்லூரி

புதுச்சேரி-புதிய அறிவியல் படைப்புகள் உருவாக்கிய வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்னர்.ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர்கள், அண்மையில் 3 அறிவியல் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.இவற்றை, ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கல்லூரி முதல்வர் குருலிங்கம், துறைத் தலைவர் ஆனந்தகுமார் வழிகாட்டுதலில் உருவாக்கினர்.'பிளக்ஸி போர்ஸ் சென்சார்' பயன்படுத்தி வாகனங்கள் திருடப்படுவதை தடுக்க, எதிர்ப்பு பாதுகாப்பு எனும் புதிய முறையை வடிவமைத்தனர்.இதை, மாணவர்கள் வினோத்குமார், வெங்கடேஷ், ஷாலினி ஆகியோர், திட்ட வழிகாட்டி ஆனந்தகுமார் உதவியோடு தயாரித்தனர்.விவசாயிகளுக்காக, ஐ.ஓ.டி., தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட் நீர் பாசன அமைப்பு முறையை உருவாக்கினர். இதை, சுல்தான், கணேஷ், விஜய் ஆகியோர், திட்ட வழிகாட்டி பிரியா உதவியோடு வடிவமைத்தனர்.மின் சேவை வழங்குனரும் நுகர்வோரும் மின் ஆற்றல் பயன்பாட்டை சுலபமாக கண்காணிக்க, ரீசார்ஜ் அடிப்படையிலான ஸ்மார்ட் மின் ஆற்றல் மீட்டரை உருவாக்கினர். இதை, கலீல், சசிபாரதி, பிரவீன் ஆகியோர் திட்ட வழிகாட்டி அபிநயசரஸ்வதி உதவியுடன் உருவாக்கினர்.மாணவர்களின் அறிவியல் திட்ட கண்டுபிடிப்புகளை ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கல்லூரி முதல்வர், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X